குட்கா பதுக்கிய பெண் கைது
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் தனபாக்கியம், 60; பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த பெட்டிக்கடையில் குட்கா, புகையிலை விற்பனை செய்வதாக வெப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று மாலை பெட்டிக்கடையில் ஆய்வு செய்தனர். ஆனால், பெட்டிக்கடையில் எதுவும் கிடைக்கவில்லை. பின், வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஒரு கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தனபாக்கியத்தை கைது செய்தனர்.