மேலும் செய்திகள்
ஈரோட்டில் பைக் திருட்டு
08-Aug-2025
ஈரோடு, ஈரோட்டில், திருமணமான ஐந்தே மாதங்களில், கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.ஈரோடு, கைகாட்டி வலசு ராசாம்பாளையம் ரோடு கீரக்காடு தோட்டத்தை சேர்ந்த பூபதி, அப்பகுதியில் கார்மென்ட்ஸ் வைத்துள்ளார். இவர் மனைவி வினோதினி, 36. எம்.ஏ. பி.எட்., எம்.பில் பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி ஐந்து மாதங்களாகிறது. வினோதியின் சொந்த ஊர் அந்தியூர் பச்சாம்பாளையம். நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணி வரை தம்பதியினர் மொபைல் போன் பார்த்துள்ளனர். நேற்று காலை வினோதினியை காணவில்லை. பூபதிக்கு சொந்தமான, 50 அடி ஆழமுள்ள கிணறு வீட்டை ஒட்டி உள்ளது. கிணற்றின் அருகே நேற்று காலை, 9:00 மணியளவில் வினோதினியின் செருப்பு கிடந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். சந்தேகத்தின் பேரில், கிணற்றில் பார்த்த போது வினோதினியின் உடல் நீரில் மிதந்து கொண்டிருந்தது.புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் உடலை மீட்க, ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் வினோதினியின் உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வீட்டுக்குள் வினோதினி பயன்படுத்திய மொபைல் போன் இருந்துள்ளது. அதில் நேற்று அதிகாலை, 2:30 மணியளவில் அந்தியூரில் உள்ள தன் தாய் இந்திராணிக்கு, 'என் சாவுக்கு யாரும் காரணமல்ல' என்று மொபைல் போனில் 'வாய்ஸ் மெசேஜாக' தகவல் அனுப்பியுள்ளார். காலையில் தான் இந்திராணி மொ பைல் போனை பார்த்துள்ளார். மகள் அனுப்பிய தகவலால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மகளுக்கு பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. பின்னர் பூபதிக்கு தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.வீரப்பன்சத்திரம் போலீசார், தற்கொலை என, வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஐந்து மாதங்களேயாவதால், ஈரோடு ஆர்.டி.ஓ.,- டவுன் டி.எஸ்.பி. ஆகியோர் தனித்தனியே விசாரணையை துவக்கி உள்ளனர். பிரேத பரிசோதனை முடிவின்படி, அவரது இறப்பு குறித்து காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
08-Aug-2025