உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோழிப்பண்ணையில் பாம்பு கடித்து பெண் பலி

கோழிப்பண்ணையில் பாம்பு கடித்து பெண் பலி

மோகனுார்: மோகனுார் அடுத்த லத்துவாடியில் உள்ள தனியார் கோழிப்-பண்ணையில், வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணி-யாற்றுகின்றனர். அந்த கோழிப்பண்ணையில், சத்தீஸ்கர் மாநி-லத்தை சேர்ந்த பிரதீப் எக்கா, 33, அவரது மனைவி சவிதாஎக்கா, 29, ஆகிய இருவரும் குடும்பத்துடன் பணியாற்றி வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்திற்கு முன், பிரதீப் எக்கா மற்றும் சவிதா எக்கா இருவரும் வழக்கம் போல், கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். அப்போது, அங்கு வந்த பாம்பு ஒன்று சவிதா எக்காவை கடித்தது. அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி