உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டா வழங்காததால் பெண் திடீர் தர்ணா

பட்டா வழங்காததால் பெண் திடீர் தர்ணா

நாமக்கல்,திருச்செங்கோடு அடுத்த அவினாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி. இவர், நேற்று குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது, திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். அப்போது, 'தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை சேர்த்து பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, அவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ