மேலும் செய்திகள்
பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
20-Jan-2025
அங்காளம்மன் கோவிலில் பெண்கள் பால்குட ஊர்வலம்ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் அருகே, அங்காளம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.இதன் கும்பாபிஷேக விழா, நாளை நடக்கிறது. இதையொட்டி, அப்பகுதியை சேர்ந்த பெண்கள், 100க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். நாமக்கல் சாலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பல்வேறு சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தது. பின், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, அரியாகவுண்டம்பட்டியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. கடந்த, 19ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது.நேற்று பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து திருவிளக்கு ஏற்றுதல், கணபதி பூஜை ஆகியவையுடன் யாக சாலை தொடங்கியது. நாளை காலை, 10:00 மணிக்கு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.
20-Jan-2025