பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் அமைப்புகள் சார்பில், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், பெண்கள் பாதுகாப்பு, பாலின வன்கொடுமைகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். மேலும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, ஊர்வலமாக சென்றனர். பேரணி, பூங்கா சாலையில் துவங்கி, மணிக்கூண்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலையில் சென்று மீண்டும் பூங்கா சாலை, அம்மா உணவகத்தில் நிறைவடைந்தது.