உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடர் வனத்தில் ஆக்கிரமிப்பு செடிகள் அகற்றும் பணி துவக்கம்

அடர் வனத்தில் ஆக்கிரமிப்பு செடிகள் அகற்றும் பணி துவக்கம்

ப.வேலுார்: ப.வேலுார் அடுத்த கபிலக்குறிச்சி பஞ்.,க்குட்பட்ட கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி மலைக்கோவில் சுற்றுப்பாதையில் உள்ள அடர் வனத்தில், 28 ராசிகளுக்குரிய மரங்கள் உள்ளிட்ட ஏராளமான நாட்டு மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அடர்வனத்தில், செடி, கொடிகள் முளைத்து முட்புதராக காணப்படுகிறது. இதனால், அடர் வனத்திற்குள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. 'அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்' என, ஆன்மிக அன்பர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கபிலர்குறிச்சி பஞ்., நிர்வாகம் சார்பில், அடர் வனத்தில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்றி தரவேண்டும் என, ப.வேலுார் ஜே.சி.ஐ., நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, அடர் வனத்தில் முளைத்துள்ள செடி, கொடிகள் மற்றும் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி, நேற்று தொடங்கியது. ப.வேலுார் தேசிய விருட்சம் தலைவர் தனபால் தலைமை வகித்தார். திட்டத்தலைவர் சதீஷ் வரவேற்றார். செயலாளர் மோகன், பொருளாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், ஜே.சி.ஐ., ஜெனட்டர் கார்த்திக் பங்கேற்று, அடர் வனத்தை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு, அடர்வனத்தில் முளைத்துள்ள செடி கொடிகள் முட்பூதர்களை அகற்றி சுத்தம் செய்தும், மரக்கிளைகளை கவாத்து செய்தும் பராமரிப்பு பணியை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ