உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி சிக்கினார்

காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி சிக்கினார்

பள்ளிப்பாளையம்:வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் காப்பர் ஒயரை திருடிய தொழிலாளியை, வெப்படை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்தவர் நாகராஜ், 31; இவர், பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வருகிறார். இந்த நுாற்பாலையில், 13 கிலோ காப்பர் ஒயரை திருடியுள்ளார். புகார்படி, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !