உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மோகனுார்:நுமோகனுார் தாலுகா, வளையப்பட்டி அருகே தனியார் ப்ளூ மெட்டல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், வடமாநிலங்களை சேர்ந்த, 9-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு, பீஹார் மாநிலத்தை சேர்ந்த டோனுகுமார், 17, என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வாகனத்தை ப்ளூ மெட்டல் நிறுவனத்தின் உள்பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் சென்டரில் வாகனங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் வரும் பம்பில் மின்சாரம் பாய்ந்ததில், டோனுகுமார் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்தவரை சக பணியாளர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி