மேலும் செய்திகள்
நுாறு நாள் பணியில் மயங்கிய பெண் தொழிலாளி
26-Sep-2024
100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர் மயங்கி விழுந்து பலிராசிபுரம், அக். 18-ராசிபுரம் ஒன்றியம் குருக்கபுரம் ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், 100நாள் வேலை திட்டத்தின் கீழ் ஓடை பகுதியில் வேலை செய்து வந்தனர். ஆண்டகலூர் கேட் அடுத்த பாலப்பாளையம் பனங்காடு பகுதியை சேர்ந்த ராஜா,51; அவர்களுடன் வேலை செய்து வந்தார். மதியம், 12:00 மணியளவில் உடல்சோர்வாக இருக்கிறது எனக்கூறி அருகே இருந்த மர நிழலில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் உட்கார்ந்த நிலையிலேயே மயங்கி விழுந்தார். அருகில் வேலை செய்த வர்கள் ஓடி சென்று தூக்கி, மார்பில் அழுத்தி முதலுதவி அளித்தனர். தொடர்ந்து, 108 அவசர கால ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் ராஜா பரிசோதனை செய்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
26-Sep-2024