விபத்தில் தொழிலாளி பலி
விபத்தில் தொழிலாளி பலி எலச்சிபாளையம், டிச. 21-எலச்சிபாளையம் அருகே, இலுப்புலி பச்சானுார் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து, 55, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 17ம் தேதி மாலை மாணிக்கம்பாளையத்தில் இருந்து, ராயர்பாளையம் நோக்கி, எக்ஸல் சூப்பர் மொபட்டில் சென்றுள்ளார். அச்சமயம், சிலுவங்காடு பகுதியில் செல்லும்போது தலைசுற்றி கீழே விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.