மேலும் செய்திகள்
லாரியில் இருந்து விழுந்தவர் பலி
14-Apr-2025
பஸ் ஸ்டாண்டில் எம்.பி., ஆய்வு
02-May-2025
நாமக்கல்,ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் முத்து, 41, கூலித்தொழிலாளி. இவர் நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் தங்கி, கூலிவேலைக்கு சென்று வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், முத்து வைத்திருந்த, 2,500 -ரூபாயை பறித்து கொண்டு, அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.இதில் முகம், நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த முத்து வலியால் அலறி துடித்தார். அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துவை கத்தியால் குத்திவிட்டு பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
14-Apr-2025
02-May-2025