உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெப்பக்குளத்தை துார்வாரும் பணியில் தொழிலாளர்கள்

தெப்பக்குளத்தை துார்வாரும் பணியில் தொழிலாளர்கள்

சேந்தமங்கலம், சேந்தமங்கலத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமேஸ்வரர் கோவில் செல்லும் வழியில், பேரூராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. மக்கள் கோரிக்கையை ஏற்று, தெப்பக்குளத்தை துார்வாரி சீரமைக்க, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.16 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவரில் இடிந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டன. தொடர்ந்து தெப்பக்குளத்தை சுற்றி, 8 அடி அகலத்தில் 600 அடி தொலைவிற்கு நடைபயிற்சி மேற்கொள்ள பாதை அமைத்து, அதில் பேவர் பிளாக் அமைக்கும் பணி நிறைவுற்றது. அதேபோல் தெப்பக்குளத்தை சுற்றிலும், பாதுகாப்பு கருதி கம்பி வேலி அமைக்கப்பட்டது. பின், பேரூராட்சி பணியாளர்கள் தெப்பக்குளத்தை துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ