உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 4வது வாரமாகமஞ்சள் ஏலம் ரத்து

4வது வாரமாகமஞ்சள் ஏலம் ரத்து

நாமகிரிப்பேட்டை, டிச. 18- நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகளும், ஆர்.சி.எம்.எஸ்., ஆகியவை மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும். மஞ்சள் சீசன் முடியும் நிலை ஏற்பட்டதால், அக்., நவ., மாதத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மஞ்சள் ஏலம் நடந்தது. ஆனால், கடந்த, 3 வாரமாக மஞ்சள் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதையடுத்து, 4வது வாரமாக, நேற்றும் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. நேற்று, 10க்கும் குறைவான மூட்டைகளே வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ