உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் தருவதில்லை

உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் தருவதில்லை

நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டடத்தில் கவுன்சிலர்கள் பேசிய விபரம்:கவுன்சிலர் சரணவன்: நாமக்கல்லில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளது. மக்கள் நலன் கருதி அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கமிஷனர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.கவுன்சிலர் நந்தகுமார்: மாநகராட்சி அலுவலகம், திருச்செங்கோடு பிரதான சாலையில் அமைந்துள்ளது. இங்கு வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால், மாநகராட்சி அலுவலகம் முன் வேகத்தடை அமைக்க வேண்டும்.நகராட்சி அதிகாரிகள்: நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் வேகத்தடை அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.கவுன்சிலர் ஈஸ்வரன்: கொண்டிசெட்டிப்பட்டி ஏரி நிரம்பினால் உபரி நீர் வெளியேற வழியில்லை. அதனால் உபரிநீர் தனியார் நிலங்களில் புகுந்து விடுகிறது. எனவே மழை காலத்திற்கு முன் அப்பகுதியை ஆய்வு செய்து, உபரிநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கமிஷனர்: உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கவுன்சிலர் சந்திரசேகர்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்து, கவுன்சிலர்களுக்கு முறையாக தகவல் அளிப்பதில்லை. எனது வார்டில் உள்ள குறைகள் குறித்து தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. த.வெ.க.,வினர் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை, அவர்கள் செய்தது போல் போட்டோ எடுத்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டு பெயர் வாங்கிக் கொள்கின்றனர்.துணை மேயர் பூபதி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் அளிக்கப்படும். மன்ற கூட்டத்தில் அரசியல் பேச வேண்டாம்.கவுன்சிலர் ரோஜாமணி: எனது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் பிரச்னை ஓராண்டாக நிலவி வருகிறது.கமிஷனர்: அப்பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொளப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.பின்னர் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட, 207 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !