உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கருப்பு கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயிகள்

கருப்பு கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயிகள்

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் இறங்கிய இளம் விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.அதில், ப.வேலுார் அருகே, பொய்யேரி வாய்க்கால் பல ஆண்டுகளாக துார்வாராததால், 200 ஏக்கர் விவசாய நிலத்தில் சாகுபடி செய்ய முடியவில்லை. ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட வாரச்சந்தையில், விவசாயிகளிடம் சுங்கம் வசூலிக்கும் தொகை, மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வைத்திருந்த விதை நிலக்கடலையை, வெளிச்சந்தையில் விற்பனை செய்த, நாமகிரிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகனுார் அருகே, பெரமாண்டபாளையம் கிராமத்தில் விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைப்பதை நிறுத்த வேண்டும்.இந்த கோரிக்கைகளை பலமுறை தெரிவித்தும் நிறைவேற்றித்தராத, மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கிறோம் என, கோஷமிட்டனர். தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட, 20 விவசாயிகளை பரமத்தி இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் கைது செய்து, பொத்தனுார் சமுதாய கூடத்தில் அடைத்தனர். பின் மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !