மேலும் செய்திகள்
டூவீலர் மீது வேன் மோதி கூலித்தொழிலாளி பலி
04-Oct-2025
ராசிபுரம், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் பூமிநாதன், 21; வக்கீல் உதவியாளர். இவரது நண்பரான, அதே பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் பிரகாஷ், 24. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை, 6:30 மணிக்கு, அணைப்பாளையத்தில் இருந்து பூமிநாதனும், பிரகாசும், 'ஹீரோ ஹோண்டா' டூவீலரில், சி.எஸ்.புரத்திற்கு டீ குடிக்க சென்றனர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. அப்போது, எதிரே வந்த பால் டேங்கர் லாரி, டூவீலர் மீது மோதியதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த பிரகாஷ், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Oct-2025