டாஸ்மாக் பாரில் தகராறு வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து
நாமக்கல், நாமக்கல் டாஸ்மாக் மதுபானக்கடை பாரில் ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு பீர்பாட்டிலால் குத்து விழுந்தது.நாமக்கல், ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ராஜ்குமார், 25, கட்டட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் இருவருடன், நாமக்கல்--சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையின் பாருக்கு மது குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு காதிபோர்டு காலனியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் முருகானந்தம், 52, என்பவரும் மது குடிக்க வந்துள்ளார். அங்கு ராஜ்குமார், முருகானந்தம் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றியதில், முருகானந்தம் கீழே கிடந்த பீர்பாட்டிலை எடுத்து ராஜ்குமாரின் கழுத்து பகுதியில் தாக்கி உள்ளார். இதில் அவருக்கு ரத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் வந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.