பட்டு வளர்ப்பு பாடம்
குன்னூர் : குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படையினர், பட்டு வளர்ப்பு குறித்து அறிந்து கொண்டனர். குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படையினர், பள்ளி தலைமையாசிரியர் ஜான்சன் வழிகாட்டுதல் படி, குன்னூர் சிம்ஸ்பூங்காவில் உள்ள பட்டு வளர்ச்சி மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். மைய இயக்குனர் ராஜலட்சுமி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி, பட்டுப்புழு வளர்ப்பு, அவற்றில் இருந்து பெறப்படும் பட்டு, பட்டின் பயன்பாடு குறித்து படிப்படியாக விளக்கினார்.