| ADDED : ஏப் 16, 2024 11:47 PM
ஊட்டி;ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில், வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிரேகா பேசியதாவது:அ.தி.மு.க., அரசு, 10 ஆண்டு ஆட்சி காலத்தில் நீலகிரிக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியது.தற்போதைய ஆட்சி அதற்கு மாறாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தில், பேச தெரியாமல் பேசி வரும் 'உருட்டு' உதயநிதி மக்களை திசை திருப்புகிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நீலகிரியின் சுற்றுசூழல் சீரழிந்துள்ளது. இவர்களுக்கு லோக்சபா தேர்தலில் மக்கள் சரியாக பாடம் புகட்ட வேண்டும்.அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார்.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், முன்னாள் எம்.பி., அர்ஜுணன், மாவட்ட துணை தலைவர் கோபால கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.