மேலும் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள்
30-Aug-2024
ஊட்டி;நீலகிரியில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், 14 ஆயிரம் தாய்மார்களுக்கு, 25.83 கோடி ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரிமாவட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகங்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருவுற்ற காலத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், 14 ஆயிரம் நிதியுதவி, 2 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஊட்டச்சத்து மாவு, இரும்பு சத்து திரவம், உலர் பேரிச்சம் பழம், ஆவின் நெய், அங்பேண்ட்சோல் பூச்சி மாத்திரை அடங்கிய பெட்டகம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 25 கோடி நிதியுதவி
இத்திட்டத்தின் வாயிலாக நீலகிரியில், '2022 - 2023ம் ஆண்டில், 4,177 கர்ப்பிணி தாய்மார்களும், 2023 - 2024ம் ஆண்டில், 6,997 கர்ப்பிணி தாய்மார்களும், 2024 - 2025ம் ஆண்டில், 3,178 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா, 2 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும், 3 தவணையாக, 14 ஆயிரம் நிதியுதவியும்,' என, மொத்தம், 14,352 தாய்மார்களுக்கு, 25.83 கோடி ரூபாய் மதிப்பில் நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''இத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், கர்ப்பிணி பெண்கள் பேருகாலத்தின் போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்டவும், மகப்பேறு காலத்தில் சத்தான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ள ஏதுவாக குழந்தை பிறப்பு எடை சரியாக இருப்பதை உறுதி செய்ய கர்ப்பிணி பெண்களிடையே ரத்த சோகை வராமல் தவிர்க்க இத்திட்டம் உதவிகரமாக உள்ளது,'' என்றார்.
30-Aug-2024