மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
10-Oct-2025
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், மழை பாதிப்புகளை உடனுக்குடன் சீர் செய்ய, 450 பேர் தயார் நிலையில் உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை ஓயாமல் தொடருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில், பாதிப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடலுார், பந்தலுார் வட்டங்களில் அதிகரித்து நிலையில், அப்பகுதி மக்களை பாதுகாக்கும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, மாவட்டத்தில், 101 வீடுகள் சேதம் அடைந்த நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு, தலா, 8,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. 325 மின்கம்பங்கள் சேதம்
இதுவரை பெய்த மழையால், ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் மற்றும் குன்னுார் பகுதிகளில், இதுவரை, 140 பெரிய மரங்கள் விழுந்து அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், 10 டிரான்ஸ்பார்மர்கள் உட்பட, 325 மின்கம்பங்கள் விழுந்து பராமரிப்பு பணிகள் நடந்து பாதிக்கப்பட்ட அவ்வப்போது பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், உள்ளூர் பணியாளர்களுடன், வெளி மாவட்டங்களில் இருந்து பல பணியாளர்கள் வந்துள்ளனர். பாதிப்புகளை எதிர்கொள்ள 450 பேர்
ஊட்டியில் கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:மாவட்டத்தில், மழை பாதிப்புகளை எதிர் கொள்ள ஏதுவாக, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட, பல்வேறு அரசுத்துறை சார்ந்த, 450 பேர் தயார் நிலையில் உள்ளனர். மழை மற்றும் காற்றின் காரணமாக, சாலைகளில் விழும் மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சீர் செய்து வருகின்றனர்.மேலும், மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் அளவு மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து, மாணவ, மாணவியர்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மின் வாரியம் சார்பில், முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை பாதிப்புகள் தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025