உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகராட்சி குழாயில் உடைப்பு வீணாகி வரும் குடிநீர்

நகராட்சி குழாயில் உடைப்பு வீணாகி வரும் குடிநீர்

கூடலுார்: கூடலுார், மார்த்தோமா நகர் அருகே, குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது.கூடலுார் மார்த்தோமா நகர் அருகே, ஏழுமுறம் கிராமத்துக்கு இணைப்பு சாலை பிரிந்து செல்லும் பகுதியில், நகராட்சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில்,'கூடலுார் நகராட்சி பகுதியில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில், சைக்கிள் டியூப் கட்டி தற்காலிகமாக சீரமைத்து குடிநீர் சப்ளை செய்கின்றனர். நிரந்தர தீர்வு காணப்படுவதில்லை. இதனால், அடிக்கடி சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. இதனை தடுக்க, உடைந்த குடிநீர் குழாய்களை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ