உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராமத்தில் முகாமிட்ட சிறுத்தை கூண்டில் சிக்கியது

கிராமத்தில் முகாமிட்ட சிறுத்தை கூண்டில் சிக்கியது

பந்தலுார் : பந்தலுார் அருகே கிராமத்தில் முகாமிட்ட சிறுத்தை கூண்டில் சிக்கியது.தமிழக எல்லை பகுதியான, பந்தலுார் சோலாடி அருகே, கேரளா மாநிலம் வயநாடு வடுவஞ்சால் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று முகாமிட்டு வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வந்தது. மேலும், கடந்த, 15ம் தேதி ஜோஸ் என்பவர் பைக்கில் சென்றபோது குறுக்கே சிறுத்தை பாய்ந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். தொடர்ந்து, வனத்துறையினர் தினபுரம் என்ற இடத்தில் கூண்டு வைத்து கண்காணித்தனர். நேற்று முன்தினம் இரவு, 8:00 -மணிக்கு கூண்டில் சிறுத்தை சிக்கியது. பின்னர், முத்தங்கா வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ