உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் காணப்படும் நீர்வீழ்ச்சி; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

சாலையோரம் காணப்படும் நீர்வீழ்ச்சி; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பந்தலுார் : பந்தலுார் அருகே, நீர்மட்டம் பகுதியில் சாலைரத்தில் காணப்படும் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக, தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சதுப்பு நில பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. மேலும் வனப் பகுதிகளை ஒட்டிய மலைகளில் காணப்படும் அருவிகள், உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயன்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், பந்தலுாரில் இருந்து, ஊட்டி மற்றும் கூடலுார் செல்லும் சாலை ஓரத்தில், நீர்மட்டம் என்ற இடத்தில், வனப் பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர் நீர் வீழ்ச்சி போல கொட்டி வருவது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த தண்ணீர் முழுவதும் காட்டி மட்டம் வனப்பகுதி வழியாக சென்று, கேரளா மாநிலம் சாலியாறு ஆற்றில் கலந்து அரபி கடலில் கலக்கிறது. மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் பெரிய அளவிலான தடுப்பணைகள் கட்டி, கோடை காலங்களில் குடிநீருக்காக தவிக்கும் மக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்ய உள்ளாட்சி அமைப்புகள் முன் வந்தால், பெரும் பயனை உருவாக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை