உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வினியோகம்

அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வினியோகம்

கோத்தகிரி;கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில், அ.தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.'தமிழகம் போதை பொருள் கிடங்காக மாறி உள்ளது; கள்ளச்சாராய மரணம் தொடர்வதால், இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. ஊட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பெள்ளி தலைமை வகித்தார்.மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வினோத் துண்டு பிரசுரம் வினியோகித்து, 'கள்ள சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்,' என, பேசினார். ஒன்றிய நிர்வாகிகள் பாபு, ராஜூபெள்ளி, வடிவேல், துரைராஜ், விசு மற்றும் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி