உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மும்மொழி கொள்கைக்கு பா.ஜ., ஆதரவு கையெழுத்து இயக்கம்

மும்மொழி கொள்கைக்கு பா.ஜ., ஆதரவு கையெழுத்து இயக்கம்

கோத்தகிரி; கோத்தகிரியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது.மத்திய அரசு, சமீபத்தில் மும்மொழி கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, பள்ளிகளில் தாய் மொழியான தமிழ், ஆங்கிலத்தை அடுத்து, மாணவர்கள் ஏதாவது, ஒரு விருப்ப மொழியை கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.அதற்கு, பல்வேறு மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மும்மொழி கொள்கையின் பயன்கள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பா.ஜ., மாநில தலைமை, 'மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து' இயக்கத்தை நேற்று துவக்கியுள்ளது.அதன்படி, கோத்தகிரி பகுதியில், பா.ஜ., நகர தலைவர் கமல் தலைமையில், இயக்கம் துவக்கப்பட்டது. மாவட்ட பொது செயலாளர் குமார், மாநில பட்டியல் அணி செயலாளர் அன்பு, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் முத்து ராஜ்குமார் மற்றும் நிர்வாகி சம்பத் உள்ளிட்டோர் முன்னிலையில், பொது மக்களிடம் இருந்து ஆதரவு கையெழுத்து பெறப்பட்டது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை