பூத்து குலுங்கும் மலர்கள்; இரண்டாம் சீசனுக்கு தயார்
குன்னுார் : குன்னுார் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக நடவு செய்த மலர்கள் பூக்க துவங்கியது.குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் செப்., இறுதியில் இருந்து நவ., மாதம் வரை இரண்டாவது சீசனின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நடப்பாண்டின் இரண்டாவது சீசனுக்காக, 'பால்சம், சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, ஸ்வீட் வில்லியம், லுாபின் ஆஸ்டர், டேலியா,' உட்பட, 75 க்கும் மேற்பட்ட மலர் செடி ரகங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், தற்போது 'பெகோனியா, டெய்சி' உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது. மற்ற மலர்கள் ஓரிரு நாட்களில் பூக்க வாய்ப்புள்ளது.