உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாரிய முடிவுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்: தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு

வாரிய முடிவுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்: தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு

ஊட்டி:'வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்,' என, கட்டுமான தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு செய்தனர்.தமிழ்நாடு முழுவதும் நலவாரிய அலுவலகங்களில் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருந்திரள் முறையீடு நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஊட்டி ஸ்டேட் பாங்க் லைனில் உள்ள நல வாரிய அலுவலகத்தில், ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் ராஜா தலைமையில், மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலையில் பெருந்திரள் முறையீடு செய்யப்பட்டது. அதில், 'வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்; நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும்; வாரிய முடிவு படி ஓய்வூதியம் மாதம், 2000 ரூபாய் உடனே வழங்க வேண்டும்; வேலை இடத்தில் விபத்தில் மரணம், ஊனமடையும் தொழிலாளிக்கு சட்டப்படி முழு இழப்பீடு வழங்க வேண்டும்,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு செய்தனர். பெண்கள் உட்பட ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை