காலநிலை மாற்றம்
ஊட்டி: ஊட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் தென்பட்டாலும், அவ்வப்போது இதமான காற்றும் வீசுகிறது. ஊட்டியில் நிலவும் இந்த காலநிலையில், கேரளா, கர்நாடகவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், பைக்காரா அருகே உள்ள, சூட்டிங் மட்டம், பைன் பாரஸ் பகுதிகளுக்கு வந்து, இயற்கை காட்சிகளை வெகுவாக ரசித்து வருகின்றனர். அதன் பின், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.