மேலும் செய்திகள்
கூடலுாரில் தம்பி கொலை; அண்ணன் கைது
27-Aug-2024
கூடலூர்;கூடலூர், நந்தட்டி அருகே, கோழிக்கோடு சாலையில், ஸ்கூட்டர் --கார் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிப்பாலத் தை சேர்ந்த தனுஷ் குமார், 20. கூடலூர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று, காலை உடற்பயிற்சி செய்வதற்காக, கோழிப்பாலத்தில் இருந்து, கோழிக்கோடு சாலை வழியாக, ஸ்கூட்டரில் கூடலூர் நோக்கி சென்றார். நந்தட்டி அருகே, கார் - ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தனுஷ்குமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
27-Aug-2024