மேலும் செய்திகள்
'ஆறுதலான வார்த்தையே வெற்றி தேடித்தரும்'
19-Aug-2024
ஊட்டி:ஊட்டியில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நேற்று முதல் நடந்து வருகிறது.மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் துவங்கியது. ஊட்டியில் உள்ள சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடந்த போட்டிகளை சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார். அதில், கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, பேட்மிட்டன் ஆகிய போட்டிகள் நடந்தது. வெற்றி பெறும் அணிகள் மாநில அளவில் சென்னையில் நடக்கும் முதல்வர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்கின்றன.அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில், '' மாநில முதல்வர் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி பல கோடி ரூபாயில் உலக தரத்துக்கு இணையாக பல்வேறு விளையாட்டு அரங்கங்களை அமைத்து கொடுத்துள்ளார். இந்தாண்டு நடக்கும் போட்டியில், மொத்த பரிசு தொகை, 37 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.நீலகிரியில், 5 பிரிவுகளில் விளையாட, 12 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்,'' என்றார். நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா, மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Aug-2024