மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
5 hour(s) ago
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ளது லிங்காபுரம், காந்தையூர். இப்பகுதிகள், பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வாழை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதே போல் மாயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, நீர்த்தேக்க பகுதியில் உள்ள வாழை தோட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல ஆயிரம் வாழைகள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.விவசாயிகள் இடுப்பளவு தண்ணீரில், வாழை தோட்டங்களுக்கு சென்று சேதம் அடையாத வாழைகளின் வாழைத்தார்களை அவசர அவசரமாக வெட்டி பரிசல் வாயிலாக கரைக்கு கொண்டு வந்து வாகனங்களில் ஏற்றி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
5 hour(s) ago