உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் ஆடி வெள்ளியில் பக்தர்கள் பரவசம்

அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் ஆடி வெள்ளியில் பக்தர்கள் பரவசம்

கூடலுார்: கூடலுார் சந்தை கடை மாரியம்மன் கோவிலில், 3-வது ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. மேல் கூடலுார் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமையில் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். 3-வது வெள்ளி கிழமையான நேற்று, அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதேபோல, மசினகுடி, பொக்காப்புரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், வெண்ணெய், பன்னீர் மஞ்சள், குங்குமம், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தனர். காலை, 7:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை