உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகளிர் குழுவினருக்கு டிஜிட்டல் உபகரண பயன்பாடு பயிற்சி

மகளிர் குழுவினருக்கு டிஜிட்டல் உபகரண பயன்பாடு பயிற்சி

ஊட்டி;தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழு பெண்களுக்கு டிஜிட்டல் உபகரணங்கள் பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இந்த பயிற்சி முகாமினை , தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் வெங்கட கிருஷ்ணன் துவக்கி வைத்தார். நீலகிரி புள்ளியல் மைய மேலாளர் விவேக் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.வெங்கட கிருஷ்ணன் கூறியதாவது:மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு, டிஜிட்டல் உபகரணங்கள் பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, நீலகிரியில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் ஆகிய நான்கு வட்டங்களில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. தற்போது அனைத்து பயன்பாடுகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி பண பரிவர்த்தனைகள் பல்வேறு செயலிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், அலுவலக கோப்புகள் பயன்பாடுகளும் பல்வேறு செயலிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து செயலிகளையும் பயன்படுத்துவது குறித்து இந்த பயிற்சி முகாமில் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.இந்த பயிற்சி முகாமில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பயிற்றுனர் மற்றும் ஊக்குனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தங்களது உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.இந்த பயிற்சி முகாமில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி பயிற்சி அலுவலர் பிரபாகரன், உதவியாளர் ரவி ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் ஏராளமான மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை