உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் சுற்றி வரும் கால்நடைகளால் இடையூறு

சாலையில் சுற்றி வரும் கால்நடைகளால் இடையூறு

கோத்தகிரி, ; கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில், கால்நடைகள் சுற்றித்திரிவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.கோத்தகிரி -ஊட்டி வழித்தடத்தில் அமைந்துள்ள கட்டபெட்டு பஜார் சாலையில், சுற்றுலா வாகனங்கள் உட்பட, வாகனங்கள் இயக்கம் அதிகமாக உள்ளது. குடியிருப்புகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அமைந்துள்ளதால், மக்கள் நடமட்டமும் நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது.இந்நிலையில், சமீப காலமாக சாலையில் கால்நடைகள் சுற்றி திரிவது வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவை, மர நிழலில் ஒதுங்குவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ