உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகராட்சி தலைவி வளையலை உருவிய தி.மு.க., கவுன்சிலர்

நகராட்சி தலைவி வளையலை உருவிய தி.மு.க., கவுன்சிலர்

குன்னுார்; முதல்வரின் பிறந்த நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின் போது, குன்னுார் நகராட்சி தலைவி அணிந்திருந்த தங்க வளையலை உருவ முயன்ற தி.மு.க., கவுன்சிலரின் 'வீடியோ' பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார், அண்ணா சிலை அருகே, கடந்த, 1ம் தேதி நடந்த, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், 'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவி சுசீலா உட்பட கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், நகராட்சி தலைவியின் கையில் அணிந்திருந்த தங்க வளையலை, 23வது தி.மு.க. கவுன்சிலர் ஜாஹிர் உசேன் உருவ முயன்றார். இவர், நீலகிரி மாவட்ட தி.மு.க., சுற்றுச்சூழல் அணி தலைவர் மற்றும் கட்சி தலைமை பேச்சாளராக உள்ளார். அவர் வளையலை உருவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் மட்டுமின்றி, பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கிண்டலடித்து பதிவு வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

புகழ் ஓவிய ராஜன்
மார் 05, 2025 20:51

உபிஸ்களை காணவில்லை


c.mohanraj raj
மார் 05, 2025 18:51

இவரை உடனே மந்திரி ஆக்க வேண்டும்


ஆரூர் ரங்
மார் 05, 2025 13:08

தொண்டனும் அவ்வழி.


NARAYANAN K
மார் 05, 2025 08:49

Haha, Super... திமுக வாழ்க. இவர் மந்திரி ஆக தகுதியுள்ள ஆள்.