மேலும் செய்திகள்
பெண்கள் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள் பட்டியல்
20-Feb-2025
குன்னுார்; தலைமறைவான டிரைவரை, குன்னுார் மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.கோத்தகிரி அரவேணு பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் மூர்த்தி,29. இவர் வாகன டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், கோத்தகிரியை சேர்ந்த, 15 வயதான மாணவியை காதலிப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக, சைல்ட் லைன், 1098 எண்ணில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குன்னுார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.
20-Feb-2025