உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினர் கிராமங்களில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

பழங்குடியினர் கிராமங்களில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

கோத்தகிரி: நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கம், கோவை 'ஸ்டேட் ஸ்ட்ரீட்' உலகளாவிய வங்கி, வருவாய் துறை, காவல் துறை மற்றும் வனத்துறை சார்பில், கோத்தகிரி பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதன்படி, கோழிக்கரை, குஞ்சபனை, அட்டடி, கோழித்தொரை மற்றும் செம்மனாரை ஆகிய பழங்குடியினர் கிராமங்களில், போதை ஒழிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி இடைநிற்றல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மதுவுக்கு அடிமையாதல் மற்றும் வனவள பாதுகாப்பு ஆகியவை குறித்து மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.கோத்தகிரி தாசில்தார் ராஜலட்சுமி, ரேஞ்சர் செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் ஸ்டேட் ஸ்ட்ரீட் வங்கிகளின் தன்னார்வலர்கள் கார்த்திக் மாரியப்பன், சுதர்சன், நாவா செயலாளர் ஆல்வாஸ் ஆகியோர், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர்.தொடர்ந்து, நாவா ஊழியர்கள், மருத்துவர்கள், வங்கி தன்னார்வலர்கள். நான்கு குழுக்களாக பிரிந்து, பழங்குடியினர் கிராம பொது இடங்கள் மற்றும் இரண்டு முக்கிய ஆறுகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் உட்பட கழிவு பொருட்களை அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி தலைமையில், டாக்டர் லட்சுமண பாரதி, மனோகரன், பூவிழி, புஷ்பகுமார், பார்வதி மற்றும் செல்வீனா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ