உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியில் உணவு திருவிழா; சிறந்த தயாரிப்புக்கு பரிசு

அரசு பள்ளியில் உணவு திருவிழா; சிறந்த தயாரிப்புக்கு பரிசு

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில், 'தானிய இயற்கை உணவுகளில் இன்றைய அவசியம்,' என்ற தலைப்பில், கம்பு, சோளம், பயறு, சாமை, தினை போன்ற அழியும் தருவாயில் உள்ள உணவு பொருட்களை கொண்டு, எலுமிச்சை சாதம், ராகி கூழ், பச்சடி, கேரட் அல்வா, இட்லி, சாமை புட்டு தயாரிக்கப்பட்டது.இதை தவிர, கடலை மிட்டாய், சத்துமாவு உருண்டை , பால் பனியாரம், கொண்டை கடலை சுண்டல், பருப்பு பாயாசம் மற்றும் சாம்பார் சாதம் ஆகிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டன.நிகழ்ச்சியில், இயற்கை ஆர்வலர்கள் சிவா, சங்க பிள்ளை மற்றும் அங்கன்வாடி பணியாளர் சியாமளா ஆகியோர் பங்கேற்று, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய, ஐந்து குழுக்களில் மாணவர்கள் தயாரித்த உணவு முறைகளை மதிப்பீடு செய்தனர்.பிறகு, சிறந்த மூன்று குழுக்களின் தயாரிப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கூறுகையில், 'பாரம்பரிய உணவு வகைகளை இக்கால தலைமுறை பின்பற்ற வேண்டும். உணவே மருந்து; மருந்தே உணவு என்ற அடிப்படையில், நம் முன்னோர் பயன்படுத்திய பாரம்பரிய இயற்கை உணவு முறைகளை பின்பற்றி, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். ரசாயனம் கலந்த துரித உணவு கலப்பட உணவுகளை உட்கொண்டு உடல் உபாதைக்கு உள்ளாகாமல், பாரம்பரிய உணவு பண்பாட்டை பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.ஆசிரியர்கள் சுந்தரம், ஜெயந்தி, இந்திரா, ரீடா மற்றும் சகாயமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் குழுவை சேர்ந்த சூர்யா வரவேற்றார். சித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை