உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அடிக்கடி மின் தடை உள்ளூர் மக்கள் பாதிப்பு

அடிக்கடி மின் தடை உள்ளூர் மக்கள் பாதிப்பு

பந்தலுார்:பந்தலுார், கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். -- பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில், கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு ஏதும் இன்றி, மின் சப்ளை துண்டிக்கப்படுவதால், அரசு அலுவலக பணியாளர்கள்; மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாரத்தில் ஒரு நாள் மட்டுமே மின் சப்ளை துண்டிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக மின் தடை ஏற்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.குறிப்பாக, யானைகள் நாள்தோறும் வந்து செல்லும் கொளப்பள்ளி அருகே ஏலமன்னா பகுதியில், கடந்த ஒரு வாரமாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டு உள்ளது. மின் கம்பிகள் வரும் வழிகளில் மர கிளைகள் விழுந்து, மின் சப்ளை துண்டிக்கப்படுவதாக கூறும் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் டான்டீ நிர்வாகத்தின் உதவியுடன், பாதிப்புகள் ஏற்படுத்தும் மரக்கிளைகளை அகற்றுவதற்கு முன் வருவதில்லை. எனவே, மக்களுக்கு தடையில்லாமல் மின் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ