உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மன்

வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மன்

கூடலுார்;ஆடி வெள்ளியை முன்னிட்டு, மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு, மாரியம்மன் கோவில்களில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதன் ஒரு பகுதியாக, மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.மாரியம்மன், வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பிரசாதமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி