உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கராத்தே பயிற்சியாளர்களுக்கு பட்டம் வழங்கும் விழா

கராத்தே பயிற்சியாளர்களுக்கு பட்டம் வழங்கும் விழா

குன்னுார்:குன்னுாரில், ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில், சிறந்த பயிற்சியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கும் விழா நடந்தது.சர்வதேச அளவில், 'ஆலன் திலக் கராத்தே' பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. குன்னுாரில் கடந்த, 48 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆலன் திலக் கராத்தே பள்ளியில், பல மாணவ, மாணவியர் சிறந்த பயிற்சி பெற்று சர்வதேச அளவில், பல்வேறு பதக்கம், பட்டம், சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.இந்நிலையில், சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு, பட்டம் வழங்கும் விழா குன்னுாரில் நடந்தது. விழாவில், அகில இந்திய கராத்தே சங்க முன்னாள் துணை செயலாளர் சிகான் பால் விக்கிரமன் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.இதில், 6வது பிளாக் பெல்ட் ரென்ஷி பட்டத்தை, முதன்மை பயிற்சியாளர் ராமகிருஷ்ணன்; தலைசிறந்த ஆசிரியர்களின் ஆசிரியருக்கான, 7வது பிளாக் பெல்ட்டின் கியோஷி பட்டத்தை முதன்மை பயிற்சியாளர் ஜோசப் பாக்கிய செல்வம்; முழு திறமை ஆசிரியருக்கான, 3வது பிளாக் பெல்ட்டின் சென்சாய் பட்டத்தை பயிற்சியாளர்கள் ஜான், நவீன், ஆகியோர் பெற்றனர்.விழாவில், கோவை கராத்தே சங்க நிர்வாகிகள் சினோத், பாலசுப்ரமணி, ராஜ்குமார், மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை