உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் வந்த ஹெலிகாப்டர் பறக்கும் படையினர் சோதனை

குன்னுார் வந்த ஹெலிகாப்டர் பறக்கும் படையினர் சோதனை

குன்னுார்;குன்னுார் பள்ளி மைதானத்தில் இறக்கப்பட்ட ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் ஜோசப் கான்வென்ட் பள்ளி மைதானத்தில், நேற்று காலை கோவையில் இருந்து வந்த ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது. கோவையை சேர்ந்த தனியார் கம்பெனி தொழிலதிபர் வேணுகோபால் வருகை தந்தார். தேர்தல் நேரத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால், தகவலின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் வந்து ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். அதில், ஒன்றும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, வேணுகோபால் உபதலை கிராமத்திற்கு சென்றார்.தேர்தல் நேரத்தில் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை