மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள்
03-Jun-2026
பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் பொது சேவை மையம், நேசக்குரல்ரத்த தான சேவை மையம் சார்பில், தாய், தந்தை இல்லாத மற்றும் ஒரு பெற்றோர் உள்ள மாணவர்களுக்கு, கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைப்பின் செயலாளர் செல்வநாயகம் வரவேற்றார். தலைவர் சிவசுந்தரம் தலைமை வகித்தார். 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும், ஒற்றை பெற்றோர் உள்ள 15 மாணவர்களுக்கு, கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. கல்வியின் அவசியம் குறித்து ஆசிரியர் தமிழ்செல்வன் விளக்கினார். நிர்வாகிகள் தியாகு, தம்பிராஜா, அருண், அரவிந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தில்லைநாதன் நன்றி கூறினார்.
03-Jun-2026