உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ராணுவ வீரர்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை

ராணுவ வீரர்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாம் குடியிருப்புகளில் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.குளிர்காலத்தின் முடிவையும், வசந்த காலத்தை வரவேற்கும் வண்ணங்களின் திருவிழாவான, ஹோலி பண்டிகை நாடுமுழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.இதன் ஒரு பகுதியாக, குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாம் குடியிருப்பு பகுதிகளில், ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர், அனைவரும் ஒருங்கிணைந்து ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். அதில், குழந்தைகளும், பெரியவர்களும் வண்ணங்களை பூசியும், வண்ண பொடிகளை துாவியும், 'பிக்காரிஸ்' எனப்படும் தண்ணீர் துப்பாக்கிகளில் நீர் பாய்ச்சியும் கொண்டாடினர். பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கூறுகையில்,'ஹோலி பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு 'ஹோலிகா' தகனம் கொண்டாடப்படுகிறது. அதில், இரவில் நெருப்பை சுற்றி மக்கள் ஒன்று கூடி, தீய பழக்கங்களை அழிப்பதற்கான சடங்குகள் செய்கின்றனர். கிருஷ்ணர் மற்றும் ராதாவுக்கு இடையிலான தெய்வீக அன்பை வெளிப்படுத்தும், விதமாக அடுத்த நாள் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்கள் ஒன்று கூடி தங்களுக்குள் தீமைகளை தடுக்கவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ