உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் ஏப்., 6ல் குதிரை பந்தயம்: நாள்தோறும் மாலையில் பயிற்சி துவக்கம்

ஊட்டியில் ஏப்., 6ல் குதிரை பந்தயம்: நாள்தோறும் மாலையில் பயிற்சி துவக்கம்

ஊட்டி;ஊட்டியில், கோடை சீசனை ஒட்டி நடக்கும் குதிரை பந்தயம், ஏப்., 6ல் துவங்க உள்ளதால், பங்கேற்க்கும் குதிரைகள் அழைத்துவரப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக 'மெட்ராஸ் ரேஸ் கிளப்' சார்பில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு குதிரை பந்தயம் ஏப்., 6ல் துவங்க உள்ளது. குதிரை பந்தயத்திற்கான ஓடுதளம் சீரமைக்கப்பட்டு தயாராக உள்ளது. குதிரைகளுக்கு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், மும்பை, கொல்கட்டா, டில்லி பகுதிகளிலிருந்து, 500 குதிரைகள் நடப்பாண்டு பந்தயத்தில் பங்கேற்க உள்ளன. மேற்கண்ட பகுதிகளிலிருந்து, 300 குதிரைகள் தற்போது வந்துள்ளது. படிப்படியாக குதிரைகள் வர உள்ளன. ஊட்டிக்கு வந்துள்ள குதிரைகளுக்கு, நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குதிரை பந்தயத்தில் பங்கேற்க, பல்வேறு மாநிலங்களிலிருந்து, 30 ஜாக்கிகள், 25 பயிற்சியாளர்கள் வர உள்ளனர். குதிரை பந்தயம் துவங்கிய பின், முக்கிய பந்தயங்களான 'நீலகிரி டர்பி, 1000 கின்னீஸ், 2000 கின்னீஸ், நீலகிரி தங்க கோப்பை,' உள்ளிட்ட முக்கிய பந்தயங்கள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை