மாலையில் கரடி உலா மாணவர்கள் அச்சம்
குன்னுார்;குன்னுார் வசம்பள்ளம் பகுதியில் மாலை நேரத்தில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி உணவுக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.இந்நிலையில், குன்னுார் அருகே வசம்பள்ளம் பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியின் அருகே சாலையில் மாலை நேரத்தில் வந்து சென்ற கரடியால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த பகுதியில் மாலை மற்றும் காலை நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.