உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கண்ணுக்குத் தெரியாத ரிப்ளக்டர்கள்

கண்ணுக்குத் தெரியாத ரிப்ளக்டர்கள்

அன்னுார் : அன்னுார், அவிநாசி சாலையில், டிவைடரில், கண்ணுக்கு தெரியாத அளவில் சிறிய ரிப்ளக்டர்கள் இருப்பதால், தினமும் விபத்துகள் நடக்கிறது. அன்னுாரில், அவிநாசி சாலையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அருகில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது.இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. விபத்துகளை தவிர்க்க, இங்கு சாலையின் நடுவே டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. டிவைடரின் துவக்கத்தில் சிறிய அளவில் ஒளி பிரதிபலிப்பான் (ரிப்ளக்டர்) ஒட்டப்பட்டுள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் இரவு நேரத்தில் அருகில் வந்த பிறகே டிவைடர் இருப்பது தெரிய வருகிறது. இதனால் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன. நேற்று முன்தினம் இரவு ஒரு கார் விபத்துக்கு உள்ளானது. கடந்த 20ம் தேதி, அதிகாலையில், லாரி மோதி கவிழ்ந்தது. இங்கு இரண்டு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கின்றது. 'டிவைடர் துவங்கும் இடத்தில் சாலையின் அகலம் குறைவாக உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், டிவைடர் துவங்குவதற்கு, 100 மீட்டர் முன்னதாகவே ரிப்ளக்டர் அமைக்க வேண்டும்.டிவைடரில் பெரியளவில் ரிப்ளக்டர் ஒட்ட வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், மேலும் விபத்துகள் அதிகரிக்கும்,' என பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி