உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -- ஜியோ ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -- ஜியோ ஆர்ப்பாட்டம்

ஊட்டி, ;ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன், 'ஜாக்டோ - ஜியோ' சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு ஜாக்டோ; ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயசீலன், முருகேசன் முன்னிலை வகித்தனர். அதில், '2003ம் ஆண்டு ஏப் ., 1ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்க கல்வி துறையில் பணிபுரியும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஆசிரியர்கள், வருவாய், தோட்டக்கலை துறை ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி